வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச மக்களுக்கு உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைப்பு
வெள்ளத்தினால் பாதிக்கப்பட்ட மண்முனை வடக்கு பிரதேச செயலகத்திற்குட்பட்ட 18 கிராமங்களைச் சேர்ந்த 220 குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகள் இன்று வெள்ளிக்கிழமை வழங்கி வைக்கப்பட்டது.
திராய்மடு சிமிர்னா திருச்சபை சிறுவர் அபிவிருத்தி திட்டத்தினரால் இன்று இவ்வாறு 10,000 பெறுமதியான உலர் உணவுப் பொதிகள் வழங்கி வைக்கப்பட்டது.
இவ் நிகழ்விற்கு பிரதம அதிதியாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி ஜஸ்டினா முரளிதரன் கலந்து கொண்டார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்