வெளிநாட்டு வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாக கூறி மோசடி

கொழும்பு – கிருலப்பனையில் வெளிநாட்டில் வேலை வாய்ப்பு பெற்றுத்தருவதாகக் கூறி 150 பேரிடம் நிதி மோசடியில் ஈடுபட்ட நபர் நேற்று செவ்வாய்க்கிழமை கைது செய்யப்பட்டுள்ளார்.

தெஹிவளையைச் சேர்ந்த 37 வயதுடைய சந்தேக நபரே குறித்த சம்பவத்தில் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த நபர் 150 நபர்களிடமிருந்து 50 மில்லியன் ரூபாயை மோசடி செய்ததாகக் கூறி சால்வே தீவு பொலிஸ் நிலையத்தில் பல புகார்கள் அளிக்கப்பட்டதைத் தொடர்ந்து இந்த கைது இடம்பெற்றுள்ளது.

சந்தேக நபர் மேலதிக விசாரணைக்காக கொம்பனித் தீவு பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.