
வெளிநாட்டு வேலைக்காக செல்லும் இலங்கையர்களுக்கு ‘ஹோப் கேட்’
வெளிநாட்டில் வேலைக்காக செல்லும் தொழிலாளர்களுக்கான ‘ஹோப் கேட்’ என்ற பிரத்தியேக நுழைவாயில், கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் இன்று வியாழக்கிழமை திறந்து வைக்கப்பட்டுள்ளது.
‘ஹோப் கேட்’ வெளிநாட்டிற்கு வேலைக்காக செல்லும் ஒவ்வொரு இலங்கையருக்கும் விமான நிலையத்தை விட்டு வெளியேறும் வரை, தனிப்பட்ட உதவிகளை வழங்கும். அங்குள்ள பிரத்தியேக வாடிக்கையாளர் சேவை குழுவினால் தனிப்பட்ட உதவி வழங்கப்படும் என வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுஷ நாணயக்கார டுவிட்டர் பதிவொன்றில் தெரிவித்துள்ளார்.

