வெளிநாட்டு பிரஜை பாலியல் துஷ்பிரயோகம்!

 

ஹபராதுவை, பீல்லகொட பிரதேச விஹாரை ஒன்றில் வழிபாடு செய்யச் சென்ற உக்ரேனிய சுற்றுலா பயணியான பெண் ஒருவரை நேற்று முன்தினம் புதன் கிழமை பாலியல் துஷ்பிரயோகம் செய்த சந்தேகத்தின் பேரில் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.

உனவட்டுன பிரதேசத்தைச் சேர்ந்த 19 வயதுடைய இளைஞனே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

உனவட்டுன பிரதேசத்தில் உள்ள விடுதியில் தங்கியுள்ள இந்த யுவதி விஹாரைக்குச் சென்று வழிபடுவதை வழக்கமாகக் கொண்டுள்ளார். இவர் நேற்று முன்தினம் வழக்கம்போல் விஹாரைக்குச் சென்று போதி மரத்தை வழிபட்டுள்ளார்.

அப்போது, குறித்த சந்தேக நபர் அங்கு வந்து புத்தர் சிலையை வழிபட வருமாறு யுவதியை அழைத்துள்ளார். அழைப்பின் பிரகாரம், புத்தரின் சிலையை வணங்கிவிட்டு வெளியே வந்தவுடன் யுவதியை பாலியல் துஷ்பிரயோகம் செய்துவிட்டு ஓடிவிட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் இது தொடர்பிலான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.