வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றி வந்த கார் விபத்து

-மூதூர் நிருபர்-

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள பச்சநூர் பகுதியில் நேற்று செவ்வாய்கிழமை இரவு காரொன்று விபத்துக்குள்ளாகியுள்ளது.

மூன்று வெளிநாட்டு பிரஜைகளை ஏற்றிக்கொண்டு திருகோணமலையிலிருந்து மட்டக்களப்பு நோக்கி பயணித்த குறித்த கார் வாகனம் பாதையைவிட்டு விளகி விபத்துக்குள்ளாகாயுள்ளது.

விபத்தில் எவருக்கும் காயங்கள் ஏற்படவில்லை. காரில் பயணித்தவர்கள் தெய்வாதீனமாக உயிர் தப்பியுள்ளனர்.

சம்பவம் தொடர்பிலான மேலதிக விசாரணைகளை மூதூர் பொலிஸார் முன்னெடுத்து வருகின்றனர்.