
வெளிநாட்டு தூதுவர்கள் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்கள் கையளிப்பு
வெளிநாட்டு தூதுவர்கள் இருவர் ஜனாதிபதியிடம் நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
புதிதாக நியமிக்கப்பட்டுள்ள இலங்கைக்கான இரண்டு வெளிநாட்டு தூதுவர்கள் இன்று ஜனாதிபதி அலுவலகத்தில், ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க விடம் தமது நற்சான்றிதழ்களை கையளித்தனர்.
இலங்கைக்கான நெதர்லாந்து தூதுவராக பொனி ஓர்பாக் (Bonnie Horbach) மற்றும் இலங்கைக்கான சவூதி தூதுவராக காலித்ஹமூட் நஸார் அல்தஸான் அல்கஹ்தானி (Kahalid Hamoud Nasser Aldasan Alkahtani ) ஆகியோர் புதிதாக அண்மையில் நியமிக்கப்பட்டுள்ளனர்.



