வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கையர் காங்கேசன்துறையில் கைது
-யாழ் நிருபர்-
வெளிநாட்டு சிகரெட்டுகளை கொண்டு வந்த இலங்கையர் ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை காங்கேசன்துறை பகுதியில் வைத்து கைது செய்யப்பட்டுள்ளார்
குறித்த நபர் சட்டவிரோதமாக இந்தியாவில் இருந்து 700 சிகரெட்டுகளை கப்பல் மூலம் எடுத்து வந்துள்ளார்.
அவர் சுங்கத்துறை அதிகாரிகளது சோதனை முவடைந்த பின்னர் வெளியே வந்தவேளை யாழ்ப்பாணம் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பொலிஸாரால் இவ்வாறு சிகரெட்டுகளுடன் கைது செய்யப்பட்டுள்ளார்.
விசாரணைகளின் பின்னர் அவரை நீதிமன்றத்தில் முற்படுத்துவதற்கான நடவடிக்கைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.