வெளிநாட்டு சிகரட்டுகளுடன் ஒருவர் கைது

-பதுளை நிருபர்-

வெளிநாட்டு தயாரிப்பிலான சிகரட்டுகளுடன் 62 வயதுடைய  நபர் ஒருவர் கைது.

பசறை ஆக்கரத்தன்ன விசேட அதிரடிப் படையினருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய பதுளை புகையிரத வீதியில் அமைந்துள்ள வர்த்தக நிலையம் ஒன்றை சோதனைக்கு உட்படுத்திய போது அங்கிருந்து வெளிநாட்டு தயாரிப்பிலான 100 சிகரட்டுகள் கைப்பற்றப்பட்டுள்ளன.

அத்துடன் 62 வயதுடைய வர்த்தக நிலையத்தின் உரிமையாளர் விஷேட அதிரடிப் படையினரால் கைது செய்யப்பட்டுள்ளதாக பதுளை பொலிஸார் தெரிவித்தனர்

கைப்பற்றப்பட்ட சிகரட்டுகளையும் சந்தேக நபரையும் பதுளை பொலிஸ் நிலையத்தில் விசேட அதிரடிப் படையினர் ஒப்படைத்துள்ளதாகவும் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நாளை புதன்கிழமை நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட  உள்ளதாகவும் பதுளை பொலிஸார் தெரிவித்தனர்