
வெளிநாட்டு சிகரட்டுகளுடன் கட்டுநாயக்க விமான நிலையத்தில் இருவர் கைது
சட்டவிரோதமான முறையில் இலங்கைக்கு கொண்டுவரப்பட்ட வெளிநாட்டு சிகரெட்டுகள் ஒரு தொகை சுங்க போதைப்பொருள் கட்டுப்பாட்டு பிரிவின் அதிகாரிகளால் கைப்பற்றப்பட்டுள்ளது.
அபுதாபியிலிருந்து EY-264 என்ற விமானம், கட்டுநாயக்க விமான நிலையத்திற்கு இன்று புதன்கிழமை அதிகாலை 03.30 மணியளவில் வந்தடைந்த போது குறித்த விமானத்திலிருந்து சிகரட் கட்டுகள் மீட்கப்பட்டன.
அங்கு கண்டெடுக்கப்பட்ட 50,000 வெளிநாட்டு சிகரெட்டுகளின் (மான்செஸ்டர் வகை) மதிப்பு சுமார் 40 லட்சம் ரூபாய்.
இந்த சிகரெட்டுகளை இலங்கைக்கு கொண்டு வந்த கொழும்பு கிராண்ட்பாஸ் பகுதியில் வசிக்கும் பெண் ஒருவரும் ஆண் ஒருவரும் சுங்க பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த வகை சிகரெட்டுகள் இலங்கைக்கு இறக்குமதி செய்ய தடை செய்யப்பட்ட பொருட்களின் வகையைச் சேர்ந்தவை என்பதால், அவற்றை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
