வெளிநாட்டிலுள்ள மனைவியை நாட்டுக்கு அழைத்து வருமாறு கூறி மின்கம்பத்தில் ஏறி கணவன் போராட்டம்!
வெளிநாட்டில் பணிபுரியும் தனது மனைவி நாடு திரும்ப வசதி செய்யுமாறு அதிகாரிகளிடம் வலியுறுத்தி, பேலியகொட பகுதியில் இன்று புதன்கிழமை, நபர் ஒருவர் மின்கம்பத்தின் மேல் ஏறி போராட்டம் செய்துள்ளார்.
தீயணைப்புப் படையினருடன் இணைந்து, பொலிஸார் குறித்த நபரை மின்சாரக் கம்பத்திலிருந்து கீழே இறக்கி பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர்.
ஊடகங்களிடம் பேசிய குறித்த நபர், தனது மூன்று குழந்தைகள் எதிர்கொள்ளும் சிரமங்கள் காரணமாக, தனது மனைவியை வெளிநாட்டிலிருந்து அழைத்து வருமாறு கேட்டுக்கொண்டார்.