வெளிநாட்டிலிருந்து பொலிஸ் உத்தியோகஸ்தருக்கு கொலை மிரட்டல்

கம்பஹா பொலிஸ் நிலையப் பொறுப்பதிகாரிக்கு டுபாயிலிருந்து கொலை மிரட்டல் விடுக்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

யுக்திய தேடுதல் வேட்டையின் கீழ் பிரதேச போதைப்பொருள் வர்த்தகர் ஒருவரை கைது செய்தமை குறித்து கெஹல்பத்தர பத்மே என்ற பாதாள உலகக் குழு உறுப்பினரே இவ்வாறு அச்சுறுத்தல் விடுத்துள்ளதாகவும் தெரியவந்துள்ளது.

சந்தேகநபரை ஐஸ் போதைப்பொருளுடன் கம்பஹா பொலிஸார் கைது செய்திருந்தனர்.

மேலும் இந்த விடயம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.