வெளிநாடு செல்வோருக்கான கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் விஷேட வேலைத்திட்டம்

இன்று புதன்கிழமை காலை 9.30 மணியளவில் லிந்துலை பொது சுகாதார வைத்திய நிலையத்தில் கொவிட்-19 3 வது 4 வது தடுப்பூசிகள் ஏற்றும் ஒருநாள் விஷேட வேலைதிட்டம் லிந்துலை பொது சுகாதார வைத்திய அதிகாரி திருமதி.ரேஷ்ணி துரைராஜ் தலைமையில் நடைபெற்றது.

லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவிக்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோருக்கு கொவிட்-19 தடுப்பூசி வழங்கும் விஷேட வேலைத்திட்டம்  முன்னெடுக்கப்படவுள்ளது .

அவர்களுக்கான தடுப்பூசி அட்டைகளும் இன்று வழங்கப்பட்டது.

லிந்துலை பொது சுகாதார வைத்திய பிரிவிற்குட்பட்ட பிரதேசத்தில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர்கள் வருகை தந்து தமக்கான கொவிட்-19 தடுப்பூசிகளை பெற்றுக் கொண்டுள்ளனர்.

இவ்விஷேட வேலை திட்டத்தில் லிந்துலை பொதுசுகாதார அதிகாரிகள், லிந்துலை பிரதேச வைத்தியசாலை வைத்திய அதிகாரி, குடும்பநல சுகாதார உத்தியோகத்தர்கள், பொது மக்கள் கலந்து கொண்டனர்.