வெளிநடப்பு செய்த பிரதேச சபை உறுப்பினர்கள்!

-யாழ் நிருபர்-

யாழ்ப்பாணம் பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு இன்றையதினம் திங்கட்கிழமை காலை 9.00 மணியளவில் பருத்தித்துறை பிரதேச சபை தவிசாளர் யுகதீஸ் தலைமையில் ஆரம்பமானது.

இதன்போது கடந்த கூட்ட அறிக்கை வாசிக்கப்பட்ட நிலையில், அதனை திருத்தம் இன்றி ஏற்றுக் கொண்டதால், ஜனநாயக தமிழ் தேசிய கூட்டணி, தேசிய மக்கள் சக்தி மற்றும் சுயேட்சை உறுப்பினர்கள் என 10 உறுப்பினர்கள் வெளிநடப்பு செய்துள்ளனர்.

ஆனாலும் பருத்தித்துறை பிரதேச சபையின் மாதாந்த அமர்வு தொடர்ச்சியாக நடைபெற்றது.