வெல்லவாய பகுதியில் கோர விபத்து: ஒருவர் பலி, நால்வர் காயம்!
வெல்லவாய – தனமல்வில பிரதான வீதியில், தெல்லுல்ல பிரதேசத்தில் இன்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்ற விபத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதுடன், நால்வர் காயமடைந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
பேருந்து, கார் மற்றும் மோட்டார் சைக்கிள் ஆகிய 3 வாகனங்கள் மோதிக்கொண்டதில் இந்த விபத்தில் ஏற்பட்டுள்ளது.
சம்பவத்தில் காயமடைந்தவர்கள் சிகிச்சைக்காக வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்தச் சம்பவம் தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
