வெல்லம் பயன்கள்
🟤சர்க்கரைக்கு ஒரு நல்ல மாற்றாக வெல்லம் கருதப்படுகிறது. இது ஆரோக்கியமானதும் கூட. சுத்திகரிப்பு முறையில் வெல்லம் தயாரிக்கப்படுவதால், சர்க்கரையை விட இதில் சத்துக்கள் அதிகமாக இருக்கும். இயற்கையாகவே இது இனிப்புத்தன்மை கொண்டதோடு பல வகையான ஊட்டச்சத்துக்கள் இதில் அடங்கியுள்ளன. கேரமல் சுவை போல் இருக்கும் வெல்லம், பல வகையான உணவுகளில் இனிப்புத்தன்மையை அதிகரிக்க பயன்படுகிறது. பாரம்பரிய இந்திய உணவு வகைகள் முதல் பானங்கள் வரை வெல்லத்தின் பயன்பாடு அதிகமாகவே உள்ளது.
🟤இதில் நமது உடல் ஆரோக்கியத்தைப் பலப்படுத்த கூடிய பல நன்மைகள் உள்ளன. வெல்லத்தில் இரும்பு, பொட்டாசியம் மற்றும் மேக்னீசியம் அதிகமாக உள்ளன. ஒரு நபர் ஆரோக்கியமாக இருப்பதற்கு இவை அனைத்தும் அவசியம் தேவை. தினசரி வெல்லத்தை உணவில் சேர்த்துக்கொண்டால் பல உடல்நல பிரச்சனைகள் தீரும். தினசரி வெல்லம் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் என்ன என்பதைப் பார்ப்போம்.
🔸 மாதவிடாய் சமயத்தில் ஏற்படும் வலி மற்றும் தசைப்பிடிப்புகளை தீர்ப்பதில் சிறப்பாக வெல்லம் செயல்படுகிறது. சூடான பாலில் கொஞ்சம் வெல்லத்தை சேர்த்து, மாதவிடாய் காலத்தில் தினசரி இரண்டு முறை இதை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🔸தொண்டை வலி அதிகமாக இருந்தால் இதிலிருந்து நிவாரணம் கிடைக்க வெல்லத்தை சாப்பிடுங்கள். கொஞ்சமாக துளசி இலையை எடுத்து, அதில் சாறெடுத்து, அந்த சாற்றை வெல்லத்தோடு நன்றாக கிளறுங்கள். இந்த கலவையை தினசரி மூன்று வேலை ஒரு ஸ்பூன் அளவு சாப்பிட்டால்இ தொண்டை வலி சீராகும்.
🔸நீர் தேக்கத்தால் சில சமயங்களில் நமது உடலில் வீக்கம் ஏற்படும். வயிறு உப்புசமாக இருக்கும். இதற்கு சிறந்த நிவாரணமாக வெல்லம் இருக்கிறது. இரண்டு கப் நீரில், ஒரு ஸ்பூன் வெல்லம் மற்றும் இரண்டு ஸ்பூன் பெருஞ்சீரகத்தை சேர்த்து, அரை கப் வரும் வரையில் நீரை கொதிக்க விடுங்கள். இதை தினசரி இரண்டு முறை குடித்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்.
🔸சளி மற்றும் காய்ச்சலுக்கு சிறந்த நிவாரணமாக வெல்லம் கருதப்படுகிறது. ஒரு கப் தண்ணீரில், வெல்லத்தை நன்றாக கரைத்து. பின்னர் அவற்றோடு கொஞ்சம் இஞ்சி சேர்த்து அதை கொதிக்க விடுங்கள். நன்றாக குளிர்ந்ததும் பாத்திரத்தில் ஊற்றி வைத்து, தினமும் 3 அல்லது 4 முறை இதை பருகி வந்தால். சளித் தொல்லையிலிருந்து உடனடி தீர்வு கிடைக்கும்.
🔸செரிமானப் பிரச்சனைக் காரணமாக பலருக்கும் அடிக்கடி வாயுத் தொல்லை, அஜீரனம், அமிலத்தன்மை மற்றும் மலச்சிக்கல் ஏற்படும். இது பல சமயங்களில் வயிற்று வலியை உண்டாக்கும். தினசரி உங்கள் உணவில் கொஞ்சம் வெல்லாம் சேர்த்தால், இப்பிரச்சனை எல்லாம் காணாமல் போய்விடும்.
🔸பிரசவத்தின் போது பெண்களின் உடலில் இருந்து நிறைய சத்துக்கள் வெளியேறியிருக்கும். எனவே அவ்வாறு இழந்த சக்தியை மீண்டும் பெறுவதற்கு வெல்லம் பெரிதும் துணையாக உள்ளது.
🔸வெல்லத்தில் செலீனியம் அதிக அளவில் உள்ளது. மேலும் இதல் உள்ள காம்ப்ளக்ஸ் சர்க்கரையானது, நரம்புகளை ரிலாக்ஸ் அடையச் செய்கிறது. இரவில் சாப்பிட்டால் நல்ல நிம்மதியான தூக்கத்தைப் பெறலாம்.
வெல்லம் பயன்கள்
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்