வெல்லம்பிட்டி பகுதியில் துப்பாக்கிச் சூடு

வெல்லம்பிட்டி – கித்தம்பவுவ பகுதியில் இன்று (25) அதிகாலை துப்பாக்கிச் சூட்டு சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

விடுதியொன்றில் தங்கியிருந்த தம்பதியரை இலக்கு வைத்து துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். சம்பவத்தில் எவருக்கும் காயம் ஏற்படவில்லை.

துப்பாக்கிச் சூட்டை நடத்திய மூன்று சந்தேக நபர்கள் அங்கிருந்து தப்பியோடியுள்ள நிலையில், அவர்களை தேடும் பணியில் பொலிஸார் ஈடுபட்டுள்ளனர்.

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டுள்ளனர்.