
வெலிக்கடை சிறைச்சாலையின் பெண் காவலர் ஒருவர் கைது
வெலிக்கடை சிறைச்சாலையின் காவலரான பெண்ணொருவர் பாதுகாப்புக்காக நியமிக்கப்பட்டிருந்த பொலிஸ் விசேட அதிரடிப்படை அதிகாரிகளால் கைது செய்யப்பட்டுள்ளார்.
இச்சம்பவம் நேற்று செவ்வாய்க்கிழமை இடம்பெற்றுள்ளது.
பெண் சிறைச்சாலை அதிகாரிகள் மற்றும் கைதிகள் சோதனையிடப்பட்டும் போது அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
குறித்த சோதனை இடம்பெறும் வேளையில், 52 வயதுடைய சந்தேகநபரான குறித்த பெண் காவலர் தம்மிடம் இருந்த மாத்திரையொன்றை வாயில் மறைத்து வைக்க முற்பட்ட வேளையில் இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
