வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்திலிருந்து 600 கைதிகள் தப்பியோட்டம்

-வாழைச்சேனை நிருபர்-

வெலிகந்த கந்தகாடு புனர்வாழ்வு நிலையத்தில் நேற்று செவ்வாய்க்கிழமை மாலை கைதி ஒருவர் உயிரிழந்ததையடுத்து அங்கு பதற்றமான சூழ்நிலை ஏற்பட்டுள்ளது.

பொலநறுவை மாவட்டம் வெலிகந்த பிரதேசத்தின் கந்தக்காடு கொரோனா தனிமைப்படுத்தல் மத்திய நிலையத்தில் சிகிச்சை பெற்று வந்த இரு குழுக்களுக்கிடையில் இடம்பெற்ற கைகலப்பு காரணமாக ஒருவர் உயிரிழந்துள்ளதாகவும், ஐவர் காயமடைந்துள்ளதாகவும் வெலிகந்த பொலிஸார் தெரிவித்தனர்.

இன்று அதிகாலை இவ் நிலையத்தில் அனுமதிக்கப்பட்டவர்களே மோதலில் ஈடுபட்டவர்கள் என்றும் இவர்கள் கந்தகாடு சேனபுர ஆகிய மத்திய நிலையங்களில் போதை புனர்வாழ்வு கொரோனா தொற்றாளர்களாக அடையாளம் காணப்பட்டவர்கள் என்று தெரிவிக்கப்படுகிறது.

இவ் சிகிச்சை முகாமில் சுமார் 600 வரையிலான வெளிமாவட்டத்தைச் சேர்ந்தோர்கள் சிகிச்சை பெற்று வந்தனர்.

சிகிச்சை பெற்று வந்தவர்கள் தப்பியோடியுள்ளதாகவும், அவர்களை தேடும் பணியில் சுகாதார பிரிவினர்,பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் ஈடுபட்டு வருவதாக பொலிஸார் தொவித்தனர்.

சம்பவம் தொடர்பில் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.