வெற்றிலைக்கேணியில் இலவச பல் சிகிச்சை முகாம்

-யாழ் நிருபர்-

வடமராட்சி கிழக்கு வெற்றிலைக்கேணி பரமேஸ்வரா வித்தியாலயத்தில் இலவச பல் சிகிச்சை முகாம் இன்று வியாழக்கிழமை நடைபெற்றது.

இலங்கை கடற்படையின் சேவா வனிதா பிரிவு மற்றும் கடற்படை பல் சேவைகள் பணிப்பாளர் ஆகியோரின் முழுமையான பங்களிப்புடனும்,  குட் நெய்பர்ஸ் பவுண்டேசனின் ஒத்துழைப்புடன் குறித்த நிகழ்வு நடைபெற்றது.

குறித்த பல் சிகிச்சை முகாமில் பாடசாலை மாணவர்கள் முள்ளியான் பொது மக்கள், ஆசிரியர்கள் என பலரும் தமது பற்களை பரிசோதித்து, வைத்திய ஆலோசனைகள் மற்றும் ஆரம்ப சிகிச்சை என்பவற்றை பெற்றுக்கொண்டனர்.

 

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க