வெற்றியில் உடனிருந்த அனைவருக்கும் நன்றி தெரிவித்த ஜனாதிபதி

பொதுத் தேர்தலில் தேசிய மக்கள் சக்திக்கு பெரும்பான்மை பலத்தை வழங்கி மறுமலர்ச்சி யுகத்தின் ஆரம்பத்திற்கு ஆதரவளித்த அனைவருக்கும் ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க சமூக ஊடகங்களில் நன்றி தெரிவித்துள்ளார்.

தேசிய மக்கள் சக்தி 6863186 வாக்குகளைப் பெற்று 141 ஆசனங்களையும் ,அதனோடு சேர்த்து தேசிய பட்டியல் ஊடாக 18 ஆசனங்களையும் கைப்பற்றியது.

அதன்படி, நாடாளுமன்றத்தில் 159 ஆசனங்களைக் கைப்பற்றி பெரும்பான்மை பலத்தைப் பெற்றுள்ளனர் என மேலும் குறிப்பிட்டுள்ளார்.