
வெருகல் ஸ்ரீ சன்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவு திறந்து வைப்பு
-கிண்ணியா நிருபர்-
திருகோணமலை மூதூர் கல்வி வலயத்துக்குட்பட்ட ஈச்சலப்பற்று தி/மூ/ஸ்ரீ சென்பகா மகாவித்தியாலயத்தில் விசேட கல்வி அலகு பிரிவொன்று இன்று செவ்வாய்க்கிழமை திறந்து வைக்கப்பட்டது.
வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ் தலைமையில் இடம் பெற்ற குறித்த விசேட கல்வி அலகினை சமூக சேவைகள் திணைக்களம் இணைந்து செயற்படுத்தப்பட்டது.
விசேட தேவை உடைய மாணவர்களுக்கும் கல்வியினை வழங்கும் நோக்கில் சமூக சேவைகள் திணைக்களம் இவ்வாறான திட்டத்தினை செயற்படுத்தி வருகின்றது.
இதில் மாவட்ட சமூக சேவைகள் இணைப்பாளர் த.பிரணவன், பாடசாலை அதிபர், ஆசிரியர்கள், உதவி பிரதேச செயலாளர், பிரதேச செயலக சமூக சேவைகள் திணைக்கள அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், விசேட கல்வி அலகு மாணவர்களின் பெற்றார்கள் என பலர் கலந்து கொண்டனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

