வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய யாத்திரை

-மூதூர் நிருபர்-

வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நல்லூர் கந்தனை நோக்கிய பாதயாத்திரையில் 8 பேரைக் கொண்ட பக்த அடியார்கள் ஈடுபட்டுள்ளனர்.

கடந்த 7ஆம் திகதி வெருகல் முருகன் ஆலயத்தில் இருந்து நடைபவனியை ஆரம்பித்த பக்த அடியார்கள் இன்று செவ்வாய் கிழமை கும்புறுபிட்டி முருகன் ஆலயத்தையும் நாளை புதன் கிழமை திரியாய் மாரியம்மன் ஆலயத்தையும், நாளை மறுதினம் வியாழக்கிழமை புல்மோட்டை முருகன் ஆலயத்தையும், எதிர்வரும் வெள்ளிக்கிழமை கொக்கிளாய் நாயாறு முனிவர் ஆலயத்தையும் தரிசித்து 44 ஆலயங்களில் தங்கி அவற்றை தரிசித்து யாழ்ப்பாணம் நல்லூர் கந்தனை எதிர்வரும் 24ஆம் திகதி தரிசிக்கவுள்ளனர்.

வேண்டுபவர்க்கெல்லாம் வேண்டும் வரங்களை அருளும் அலங்காரக் கந்தனிடம் வைத்த வேண்டுதலை நிறைவேற்றும் முகமாக 7ஆவது வருடமாக குறித்த பாதயாத்திரையில் ஈடுபட்டு வருவதாகவும் அடியார்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்