புதிய பேருந்து சேவை ஆரம்பம்

வெருகல் பிரதேச சபை தவிசாளர் திரு செ. கருணாநிதி அவர்களின் ஒழுங்குபடுத்தலில் முதன் முதலாக வெருகல் -மாவடிச்சேனையில் இருந்து கொழும்பு வரையான அரச பொது போக்குவரத்து (CTB ) பேரூந்து சேவை நேற்று செவ்வாய்க்கிழமை இரவு உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்பட்டது

புதிதாக ஆரம்பிக்கப்பட்ட இவ் இரவு நேர பஸ் சேவையானது இரவு 11:00 மணிக்கு வெருகல் – மாவடிச்சேனையில் இருந்து கொழும்பு நோக்கி புறப்படும்.

இத்தனை வருட காலமாக வெருகல் பகுதியைச் சேர்ந்த மக்கள் கொழும்புக்கு செல்ல வேண்டுமாக இருந்தால் சுமார் 15 கிலோ மீற்றர் தூரமுள்ள சேருநுவர பகுதிக்குச் சென்று அங்கிருந்து பேரூந்தை எடுத்து கொழும்புக்குச் செல்லும் நிலை காணப்பட்டது.இப்புதிய பஸ் சேவையின் மூலம் வெருகல் பகுதியைச் சேர்ந்த மக்கள் நன்மையடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

இவ் பஸ்சேவை ஆரம்ப நிகழ்வில் வெருகல் பிரதேச சபையின் தவிசாளர், மூதூர் போக்குவரத்து சாலை முகாமையாளர், வெருகல் பிரதேச சபை உறுப்பினர்கள் என பலரும் கலந்து கொண்டனர்.