வெருகல் கட்டையாறு பாலம் திறந்து வைப்பு
-கிண்ணியா நிருபர்-
கட்டையாறு பாலம் நேற்று முன் தினம் திங்கட்கிழமை இராஜாங்க அமைச்சரும் மட்டக்களப்பு மாவட்ட அபிவிருத்திக்குழுத் தலைவருமான சிவநேசதுரை சந்திரகாந்தனால் திறந்துவைக்கப்பட்டது.
கிராமிய வீதிகள் அபிவிருத்தி இராஜாங்க அமைச்சின் நிதி ஒதுக்கீட்டின் கீழ் அமைக்கப்பட்ட வெருகல் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட கட்டையாறு பாலமே இவ்வாறு திறந்து வைக்கப்பட்டுள்ளது.
வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் திருகோணமலை மாவட்ட அபிவிருத்தி குழுத்தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான கபில நுவன் அத்துகோரல, வெருகல் பிரதேச செயலாளர் எம்.ஏ.அனஸ், வீதி அபிவிருத்தி அதிகார சபை உத்தியோகஸ்தர்கள் மற்றும் பொதுமக்கள் உட்பட பலரும் கலந்து கொண்டிருந்தனர்.