வெயிலுக்கேற்ற சுவையான மில்க் ஷேக்
பேரீச்சம்பழத்தில் கொலஸ்ட்ரால் குறைவாக உள்ளது மற்றும் புரதம், வைட்டமின்கள் மற்றும் இரும்புச்சத்து நிறைந்துள்ளது.
பேரிச்சம்பழத்தில் நார்ச்சத்து மற்றும் நோயை எதிர்த்துப் போராடும் ஆன்டி ஆக்ஸிடன்ட்டுகளும் அதிகமாக இருப்பதால், இது நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் பானமாக இருக்கின்றது. ஆகவே இதை எவ்வாறு இந்த வெயில் காலத்தில் செய்து குடிக்கலாம் என்று தெரிந்துக்கொள்வோம்.
🍒 கஜூ – 07
🍒 சூடான பால் – 02 கப்
🍒 பாதாம் – 05
🍒 ஏலக்காய் – ஒரு சிட்டிகை
முதலில் ஒரு சிறிய கிண்ணத்தில் 4-5 பாதாம் பருப்புகளை எடுத்து கழுவிக்கொள்ள வேண்டும்.
கழுவிய பாதாமை சூடான நீரில் 1 மணி நேரம் ஊற வைக்கவும்.
1 மணி நேரம் கழித்து ஊறவைத்த பாதாமை உரித்து, அதனுடன் 7 பேரீச்சம்பழங்களை எடுத்து, விதைகளை நீக்கிக்கொள்ள வேண்டும்.
இறுதியாக ஒரு மிக்ஸியில் பாதாம், பேரீச்சம்பழம் மற்றும் சூடான பால் ஏலக்காய் சேர்த்து அரைத்து எடுத்துக்கொண்டால் சுவையான பேரீச்சம்பழ மில்க் ஷேக் தயார்!
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்