வெப்பநிலை தொடர்பில் எச்சரிக்கை
பல பகுதிகளில் மனித உடலால் உணரப்படும் வெப்பநிலை நாளை (24) அவதானம் செலுத்த வேண்டிய மட்டத்தில் இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
வடக்கு, வடமத்திய மற்றும் கிழக்கு மாகாணங்களிலும், மொனராகலை மற்றும் ஹம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் அதிக வெப்பம் நிலவக்கூடும் என திணைக்களம் தெரிவித்துள்ளது .
குறித்த பகுதிகளில் வெப்பநிலை 39 முதல் 45 டிகிரி செல்சியஸ் வரை இருக்கும் என வளிமண்டலவியல் திணைக்களம் மேலும் குறிப்பிட்டுள்ளது.
