வெனிசுவேலா ஜனாதிபதியும் அவரது மனைவியும் பிடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக ட்ரம்ப் தெரிவிப்பு!

தாக்குதல்களுக்குப் பின்னர் வெனிசுவேலா ஜனாதிபதி நிக்கோலஸ் மதுரோவும் அவரது மனைவியும் பிடிக்கப்பட்டு நாட்டை விட்டு வெளியேற்றப்பட்டுள்ளதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப், வெனிசுவேலா தலைநகர் கராகஸ் (Caracas) உள்ளிட்ட பகுதிகளில் உள்ள இராணுவ இலக்குகள் மற்றும் தளங்கள் மீது தாக்குதல் நடத்தியதை தொடர்ந்தே இந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.