
வெனிசுலா தேர்தல் : ஆளும்கட்சி அபார வெற்றி!
வெனிசுலாவில் பாராளுமன்றம் மற்றும் மாகாணங்களுக்கான சட்டமன்ற உறுப்பினர்களை தேர்ந்தெடுக்கும் தேர்தல் நடைபெற்றது.
54 கட்சிகள் கலந்துகொண்ட இந்த தேர்தலை அமெரிக்காவின் ஆதரவை அந்நாட்டு எதிர்க்கட்சியினர் கடுமையாக எதிர்த்தனர். தேர்தலில் மோசடி நடக்க வாய்ப்பு உள்ளதாகக் கூறி எதிர்க்கட்சியினர் பிரசாரத்திலும் ஈடுபட்டனர்.
இந்நிலையில், கடந்த 26 ஆம் திகதி வெனிசுலாவில் பொதுத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு இடம்பெற்றது. இதில் பொதுமக்கள் ஆர்வத்துடன் வாக்குச்சாவடிகளுக்கு வந்து தங்களுடைய வாக்குகளைச் செலுத்தினர். இதனை தொடர்ந்து நேற்று செவ்வாய்க்கிழமை தேர்தலில் பதிவான வாக்குகளை எண்ணும் நடவடிக்கை ஆரம்பமாகியது.
மொத்தம் 285 உறுப்பினர்களைக் கொண்ட அந்த நாட்டின் பாராளுமன்றத்தில் ஆளும் சோசியலிஸ்ட் கட்சியினர் 230 இடங்களில் வெற்றி பெற்றுள்ளனர்.
மேலும், மாகாணங்களில் 24 இடங்களில் 23 இடங்களில் வெற்றி பெற்றனர்.
இதனால் அந்நாட்டின் புதிய ஜனாதிபதியாக நிகோலஸ் மதுரோ மீண்டும் தேர்வாகி பதவியேற்க உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
