வெனிசுலா முழுமையான ஜனநாயகத்தை நோக்கி நகரும் நிலையில், நாட்டில் தேர்தல் நடத்தப்படும் என இடைக்கால ஜனாதிபதி டெல்சி ரொட்ரிக்ஸ் ஐக்கிய நாடுகள் பொதுச் சபையில் உறுதியளித்துள்ளார். எனினும், தேர்தலுக்கான குறிப்பிட்ட திகதியை அவர் அறிவிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளுடன் அரசாங்கம் அரசியல் பேச்சுவார்த்தைகளை ஆரம்பித்துள்ளதாகவும், அனைத்து அரசியல் சக்திகளும் சமமான நிபந்தனைகளுடன் தேர்தலில் பங்கேற்கும் வகையில் நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்றும் ரொட்ரிக்ஸ் தெரிவித்துள்ளார். தேர்தல் செயல்முறைக்குத் தேவையான தேசிய நிறுவனங்கள் தயார்படுத்தப்பட்டு வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.
அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பும் ரொட்ரிக்ஸை சந்தித்தபோது, வெனிசுலாவில் சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தல் நடைபெற வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்தியதாக அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மார்கோ ரூபியோ தெரிவித்துள்ளார்.










