வெந்தயத்தின் மருத்துவ பயன்கள்
மருத்துவ குணங்கள் அதிகம் நிறைந்துள்ள வெந்தயம்
வெந்தயத்திலுள்ள எண்ணை பசை தலைமுடிக்கு வளர்ச்சியை, கருமை நிறத்தை தருகிறது.
வெந்தயத்தில் நீர்ச்சத்து, புரதச்சத்து, கொழுப்பு சத்து, மாவுச்சத்து போன்றவைகள் உள்ளன. மேலும் சுண்ணாம்பு சத்து, மணிச்சத்து, இரும்புச்சத்து, சோடியசத்து, பொட்டாசியம் போன்ற தாதுப் பொருட்களும், தயாமின், ரிபோபிளேவின், நிகோடினிக் அமிலம், வைட்டமின் “ஏ” போன்றவைகளும் அடங்கியுள்ளன.
🟡வெந்தயத்தில் இரும்புச் சத்து இருப்பதால் இரத்த விருத்தி ஏற்படும்.
🟡உணவில் வெந்தயம் அடிக்கடி சேர்த்து வந்தால் மலச்சிக்கல் வராது. ஒரு டம்ளர் மோரில் சிறிது வெந்தயம், சீரகப் பொடி கலந்து குடித்தால் வாயுத் தொல்லை நீங்கும்.
🟡இரவில் வெந்தயத்துடன் ஒரு டம்ளர் அளவு நீரினை ஊறவைத்து அதிகாலையில் வடிகட்டி எடுத்து வந்தால் உடல் சூடு தணியும்.
🟡வெந்தயத்துடன் தேன் சேர்த்து எடுத்துக் கொண்டால் சிறந்த பலன் கிடைக்கும்.
🟡வெந்தய கீரையுடன் அத்தி பழம், உலர் திராட்சையை சிறிது சேர்த்து தேநீராக்கி சாப்பிடுவதால் உடலினுள் ஏற்படும் பிரச்சினைகள் விலகும்.
🟡வெந்தயத்தை நீர் ஊற்றி வேகவைத்து வேகவைத்த நீரை தினமும் பருகிவந்தால் மாரடைப்பு, மூச்சு முட்டுதல், ஆஸ்துமா ஆகியவற்றிற்கு சிறந்த மருந்தாக பயன்படுகிறது.
🟡ஜீரண உறுப்புகளை சரி செய்து செரிமானத்தை சீராக்குகிறது.
🟡வெந்தயத்தை முதல் நாள் இரவு ஊற வைத்து மறு நாள் காலையில் அரைத்து தரைமுடியின் அடிக்கால்களில் தடவி அரை மணிநேரம் வைத்து பின் குளித்து வந்தால் பொடுகு குறையும் முடி உதிர்வது நீங்கும். தலைமுடி அடர்தியாக வளரும்.
🟡வெந்தயம் உண்பதால் வயிற்றில் கழிவுகள் சேராமல் சீராவதால் இரத்த ஓட்டம் விருத்தியடைகிறது.
இதய நோயின் வலி குறைகிறது.
🟡வெந்தயக்கீரையை அரைத்து முகத்தில் அரை மணி நேரம் தடவ முகம் பளபளக்கும்.
🟡ஒரு துண்டு இஞ்சியுடன் கொஞ்சம் வெந்தயம் வைத்து அரைத்து சாப்பிட்டால் பித்தம் விலகும்.
🟡சிறிது வெந்தயத்தை மென்று தின்று இரண்டு சின்ன வெங்காயத்தை மோரில் இட்டு சாப்பிட்டு வர பருமனான உடல் எடை குறையும்.
🟡வெந்தயத்தில் வேதிப்பொருள் உள்ளதால் இருதய நோய் வருவதை தடுக்கிறது.
🟡வெந்தயத்தில் தேவையான பொட்டாசியம் இருப்பதால் இரத்தத்தையும் இருதய துடிப்பும் கட்டுக்குள் வைக்கிறது.
🟡கொஞ்சம் வெந்தயத்துடன் இரண்டு வெற்றிலையை சேர்த்து நன்கு மென்று சாப்பிட்டால் வயிற்று வலி, வயிற்றுக் கடுப்பு குணமாகும்.
இவ்வாறு வெந்தயம் உண்பதால் நமது உடலுக்கு பல்வேறு பலன்களையும் ஆரோக்கியத்தையும்
அளிக்கிறது.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்