
வெண்ணிற ஈ தொடர்பான விழிப்புணர்வு செயலமர்வு
-மூதூர் நிருபர்-
“தென்னை பயிர்ச்செய்கையுடன் தொடர்புடைய பங்குதாரர்களின் ஒன்றிணைவு ” எனும் தொணிப் பொருளின் கீழ் மூதூர் பிரதேச தென்னை செய்கையாளர்களுக்கான செயலமர்வு நேற்று புதன்கிழமை மூதூர் பிரதேச செயலக கேட்போர் கூடத்தில் இடம்பெற்றது.
திருகோணமலை தென்னைப் பயிர்ச்செய்கை சபை பிராந்திய காரியாலயத்தின் ஏற்பாட்டில் இச் செயலமர்வு இடம்பெற்றது.
இதன்போது தென்னை பயிரிடல் முதல் பயனடையும் வரையில் தென்னை செய்கையாளர்கள் எதிர்நோக்கும் பிரச்சினைகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டிருந்தன.
குறிப்பாக அண்மைக் காலமாக தென்னை மரங்களுக்கு சேதம் விளைவித்து வரும் வெண்ணிற ஈ தாக்கம் தொடர்பாக கூடிய கவனம் செலுத்தப்பட்டு அதனை கட்டுப்படுத்த எடுக்கப்பட வேண்டிய மாற்று வழிகள் தொடர்பாக கலந்துரையாடப்பட்டு ஆலோசனைகளும் வழங்கப்பட்டன.
இச் செயலமர்வில் திருகோணமலை தென்னை பயிர்ச்செய்கை சபையின் பிராந்திய முகைமையாளர் சுமீத் பண்டார, மூதூர் பிரதேச செயலக உதவித் திட்டமிடல் பணிப்பாளர் பீ.அறபாத், மூதூர் உதவி விவசாயப் பணிப்பாளர் எம்.இம்தியாஸ், விவசாய உத்தியோகத்தர்கள் ,தென்னை அவிருத்தி உத்தியோகத்தர்கள் என பலரும் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.
இச் செயலமர்வில் மூதூர் பிரதேசத்தைச் சேர்ந்த தென்னை செய்கையாளர்கள் கலந்து கொண்டனர்.
