வெடுக்குநாறிமலை விவகாரம்: நீதிபதியின் அதிரடி உத்தரவு

வவுனியா வெடுக்குநாறிமலையில் சிவராத்திரி தினத்தில் கைது செய்யப்பட்ட 7 சிவபத்தர்களையும் ஆலய பூசாரியையும் விடுதலை செய்யுமாறு வவுனியா நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

வெடுக்குநாறிமலை ஆதிசிவன் கோயில் சிவராத்திரி வழிபாட்டில் ஈடுபட்ட மற்றும் கோயில் நிர்வாகத்தினர் 8 பேரை நெடுங்கேணி பொலிஸார் கைது செய்தனர்.

இந்தநிலையில், கைதானவர்களின் வழக்கு இன்று செவ்வாய் கிழமை வவுனியா நீதிமன்றத்தில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன் போது குறித்த வழக்கினை கொண்டு நடத்துவதற்கு மேலும் காலஅவகாசத்தை பொலிஸார் கோரியை நிலையில் சட்ட மா அதிபர் திணைக்களத்திடம் இருந்து சில அறிவுறுத்தல்களை பெறவேண்டி இருப்பதாக நீதிமன்றத்தில் முன்வைத்திருந்தனர்.

இருப்பினும் பொலிஸாரால் எந்த விதமான ஆவணங்களும் சமர்பிக்காத நிலையில் குறித்த வழக்கை முழுமையாக நிராகரித்து சம்மந்தப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.