
வெடுக்குநாறிமலை ஆலயத்தினர் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம்
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தினரின் ஏற்பாட்டில் வவுனியாவில் கவனயீர்ப்பு போராட்டம் இன்று வெள்ளிக்கிழமை காலை முன்னடுக்கப்பட்டுள்ளது.
வெடுக்குநாறிமலை ஆதிலிங்கேஸ்வரர் ஆலயத்தில் சிவராத்திரி தினத்தன்று வழிபாட்டில் ஈடுபட்ட போது கைதுசெய்யப்பட்ட 8 பேரையும் விடுதலை செய்யுமாறு வலியுறுத்தி குறித்த போராட்டம் முன்னடுக்கப்பட்டது.
குறித்த போராட்டமானது நெடுங்கேணி சந்தியில் ஆரம்பமாகி பேரணியாக வவுனியா வடக்கு பிரதேச செயலகத்தை அடைந்து அங்கு மகஜர் கையளிக்கப்பட்டதுடன் அங்கிருந்து நெடுங்கேணி பொலிஸ் நிலையம் நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
குறித்த போராட்டத்தில் நாடாளுமன்ற உறுப்பினர்களான சார்லஸ் நிர்மலநாதன், சிவஞானம் சிறீதரன், வினோநோதராதலிங்கம், செல்வராசா கஜேந்திரன் உள்ளிட்டவர்களும் இணைந்துக் கொண்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
