வெடிபொருட்களுடன் நான்கு பேர் கைது செய்யபட்டுள்ளனர்.
மாத்தளை – நாவுல பிபில பிரதேசத்தில் நேற்று புதன் கிழமை காலை மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் வெடிபொருட்களுடன் நான்கு சந்தேக நபர்கள் கைதுசெய்யப்பட்டதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
கட்டுகஸ்தோட்டை, கம்பளை, எலஹெர மற்றும் உடலகவின்ன ஆகிய பகுதிகளைச் சேர்ந்த 38, 49, 50 மற்றும் 65 வயதுடையவர்களே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர்கள் முச்சக்கரவண்டியில் பயணித்துக் கொண்டிருந்த போது கைதுசெய்யப்பட்டு அவர்களிடமிருந்து 05 டெட்டனேட்டர்கள், 3 வோட்டர் ஜெல் குச்சிகள் மற்றும் வயர் ரோல் ஆகியவை கண்டுபிடிக்கப்பட்டன.
நாவுல பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
