வெடிக்காத நிலையில் தனியார் காணியிலிருந்து கண்டுபிடிக்கப்பட்ட செல்!
கிளிநொச்சி-இராமநாதபுரம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட 10 வீட்டு பகுதியில் 1990 ஆண்டுக்கால பகுதியில் இராணுவத்தினால் ஏவப்பட்ட பீப்பாய் செல் ஒன்று வெடிக்காத நிலையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.
குறித்த பகுதியில் உள்ள தனியார் காணி உரிமையாளர் ஒருவர் தனது காணியினை துப்பரவு செய்யும் போது குறித்த செல் வெடிக்காத நிலையில் இருப்பதை அவதானித்துள்ளார்.
இது தொடர்பில் இராமநாதபுரம் பொலிஸாருக்கு வழங்கப்பட்ட தகவலுக்கு அமைவாக இராமநாதபுரம் பொலிஸார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று பார்வையிட்டதுடன் தற்பொழுது கிளிநொச்சி நீதிமன்ற நீதவனின் அனுமதியுடன் செல் செயலிழக்க செய்வதற்கு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாகவும் அப்பகுதியில் பாதுகாப்பு வழங்கப்பட்டுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

