வெடிகுண்டை வைத்து விளையாடிய 5 சிறுவர்கள் பலி!

பாகிஸ்தானில் வயலில் புதைந்து கிடந்த வெடிகுண்டை விளையாட்டுப் பொருள் என நினைத்து, சிறுவர்கள் எடுத்த போது அது வெடித்துச் சிதறியதில் 5 சிறுவர்கள் பலியாகினர்.

அத்துடன் குறித்த சம்பவத்தில் 12 சிறுவர்கள் படுகாயமடைந்துள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.

சம்பவத்தில் காயமடைந்த சிறுவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

அதில் சில சிறுவர்களின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

சம்பவம் தொடர்பிலான விசாரணைகளைப் பாகிஸ்தான் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.