வெடிகுண்டு அச்சுறுத்தல் : 240 பயணிகளுடன் கட்டுநாயக்கவில் தரையிறக்கப்பட்ட விமானம்!

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வெடிகுண்டு அச்சுறுத்தல் காரணமாக இந்திய விமானமொன்று விசேட சோதனைக்கு உட்படுத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

மும்பையிலிருந்து இன்று சனிக்கிழமை பிற்பகல் 3 மணியளவில் கட்டுநாயக்க விமான நிலையத்தை வந்தடைந்த இந்தியாவின் விஸ்தாரா விமானச் சேவைக்கு சொந்தமான விமானமொன்றே இவ்வாறு சோதனைக்கு உட்படுத்தப்படுவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

குறித்த விமானத்திலுள்ள பயணிகள் மற்றும் விமான பணிக்குழாமினர் பாதுகாப்பாக வெளியேற்றப்பட்டுஇ விமானத்தினுள் சோதனை நடத்தப்படுவதாக பொலிஸ் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.