
வெசாக் பண்டிகை மே 30-இல் கொண்டாடப்படும்
2026ஆம் ஆண்டுக்கான அரச வெசாக் பண்டிகையை மே மாதம் 30ஆம் திகதி நடத்துவதற்கு அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சர் பேராசிரியர் சர்தன அபேரத்ன இன்று சனிக்கிழமை இந்த தகவலை வெளியிட்டார்.
நான்கு பீடங்களின் மகாநாயக்க தேரர்கள் விடுத்த வேண்டுகோளுக்கு இணங்க இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
2026ஆம் ஆண்டு மே மாதத்தில் இரண்டு பௌர்ணமி தினங்கள் வருவதால், வெசாக் பண்டிகைக்கான திகதியை மறுபரிசீலனை செய்யுமாறு அவர்கள் ஜனாதிபதியிடம் கோரியிருந்தனர்.
முன்னதாக பூரணை தொடர்பான குழு மே 1ஆம் திகதியை வெசாக் பௌர்ணமி தினமாகத் தீர்மானித்திருந்தது. எனினும், மீண்டும் கூடிய அந்த குழு, அரச வெசாக் பண்டிகையை மே 30ஆம் திகதி நடத்த முடிவு செய்துள்ளது.
மே மாதம் 1ஆம் திகதி பௌர்ணமி தினத்தில் மக்கள் எப்போதும் போல தங்களது மத வழிபாடுகளில் ஈடுபட முடியும்.
இருப்பினும், அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அரச வெசாக் பண்டிகை மே 30ஆம் திகதியே நடைபெறும் என அமைச்சர் தெளிவுபடுத்தினார்.
