வெங்காய வரி குறைப்பு

இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான வரியை குறைக்க நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார மேம்பாட்டு அமைச்சக தீர்மானித்துள்ளது.

இதன்படி இறக்குமதி செய்யப்படும் வெங்காயத்திற்கான 30 ரூபாய் வரி 20 ரூபாவாக குறையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதேவேளை ஒரு கிலோகிராம் உருளைக்கிழங்கிற்கு 60 ரூபாய் விசேட வர்த்தக வரியும் விதிக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

குறித்த வரிக்குறைப்பு மற்றும் விசேட வர்த்தக வரி என்பன இம்மாதம் 31ஆம் திகதி வரையில் அமுலில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்