வீழ்ச்சிக்குள்ளாகும் தேயிலையின் விலை

தேயிலைக்கான விலை பாரியளவில் வீழ்ச்சியை சந்தித்துள்ளதாக தேயிலை தொழிற்சாலை உரிமையாளர்கள் சங்கத்தின் தலைவர் லியனல் ஹெரத் தெரிவித்துள்ளார்.

அதன்படி, 1500 ரூபாவாக இருந்த ஒரு கிலோ சாதாரண தேயிலையின் விலை 1000 ரூபாவாக குறைவடைந்துள்ளது.

ரூபாவின் பெறுமதி அதிகரித்துள்ளமை, தேயிலை விநியோகம் அதிகரிப்பு மற்றும் உற்பத்தி விலை அதிகரித்தமை உள்ளிட்ட காரணங்கள் இதில் தாக்கம் செலுத்தியுள்ளதுடன் இந்நிலைமயானது தேயிலை தொழிற்சாலைகளை முன்னெடுத்து செல்வதில் சவாலை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் அறிவித்துள்ளார்.