வீரகெட்டிய துப்பாக்கி சூட்டில் இருவர் பலி
வீரகெட்டிய பகுதியில் இன்று திங்கட்கிழமை இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டு சம்பவத்தில் இருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வீரகெட்டிய பிரதேச சபையின் தலைவரின் வீட்டில் துப்பாக்கிச் சூடு சம்பவம் இடம்பெற்றுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
சம்பவத்தில் ஐந்து பேர் படுகாயமடைந்துள்ளனர். இது தொடர்பான மேலதிக தகவல்கள் இதுவரை தெரியவரவில்லை.
