வீதி விபத்துக்களை தடுப்பது தொடர்பான கலந்துரையாடலும் களவிஜயமும்
-மூதூர் நிருபர்-
மூதூரிலுள்ள திருகோணமலை மட்டக்களப்பு ஏ-15) பிரதான வீதியில் தற்போது அதிகளவில் விபத்துகள் இடம்பெற்று வருவதால், அவற்றைத் தடுக்கும் நோக்கில் எடுக்கப்படவேண்டிய நடவடிக்கைகள் தொடர்பான கலந்துரையாடல் நேற்று செவ்வாய்கிழமை மூதூர் பிரதேச செயலாளர் எம். பி .எம். முபாறக் தலைமையில் நடைபெற்றது.
ஏ-15 வீதியின் மூதூர் இரால்குழி தொடக்கம் கிளிவெட்டி வரையான வீதியில் வீதி விபத்துக்கள் அன்மைக்காலத்தில் அதிகரித்துள்ளது, இவ்விபத்துக்களை குறைப்பதற்கான நடவடிக்கைகள் தொடர்பாகவும் ஆலோசிக்கப்பட்டதுடன் முற்கட்டமாக நகர் பகுதியில் சந்தை வீதியில் போக்குவரத்திற்கு இடையூராக அமைக்கப்பட்டிருக்கும் தற்காலிக கடைகள் மற்றும் பொருட்களை அகற்றுமாறும் கடை உரிமையாளர்களுக்கு அறிவுறுத்தப்பட்டது.
இந்நிகழ்வில் பிரதேச சபை தவிசாளர் எஸ். பிரகலாதன் , உதவி பிரதேச செயலாளர், பிரதி திட்டமிடல் பணிப்பாளர், வீதி அபிவிருத்தி அதிகாரசபை பொறியியலாளர், வீதி அபிவிருத்தித்தி திணைக்களத்தின் பொறியியலாளர், பிரதேச சபை செயலாளர், அரசியல் கட்சி பிரதிநிகள், வீதிப் போக்குவரத்து பொலிசார், மற்றும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களும் கலந்துகொண்டனர்.