Last updated on July 29th, 2024 at 11:27 am

வீதி விபத்தில் தந்தையும் மகனும் பலி

வீதி விபத்தில் தந்தையும் மகனும் பலி

பிடிகல – மாபலகம வீதியின் மத்தக்க பிரதேசத்தில் பாரவூர்தி ஒன்றும் கார் ஒன்றும் நேருக்கு நேர் மோதியதில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த தந்தையும் மகனும் உயிரிழந்துள்ளனர்.

இவ்விபத்தில் இரு பெண்கள் காயமடைந்து எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

ஒரே குடும்பத்தை சேர்ந்தவர்களே காரில் பயணித்துள்ளதுடன், குடும்ப அங்கத்தவர் ஒருவரே காரை செலுத்தியுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

மோட்டார் சைக்கிளில் குறித்த வீதியில் பயணித்த அதிபர் ஒருவரும் சிறு காயங்களுடன் எல்பிட்டிய ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

விபத்து தொடர்பில் பாரவூர்தி சாரதியை பிடிகல பொலிஸார் கைது செய்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க