வீதி விபத்தில் இருவர் படுகாயம்

-கிளிநொச்சி நிருபர்-

கிளிநொச்சி பொலிஸ் பிரிவுக்கு உட்பட்ட விவேகானந்தா நகர் பகுதியில் இன்று வெள்ளிக்கிழமை இடம்பெற்ற விபத்தில் இருவர் படுகாயமடைந்துள்ளனர்.

கிளிநொச்சியில் இருந்து விவேகானந்தர் பகுதியை நோக்கிச் சென்ற மோட்டார் சைக்கிளும், விவேகானந்தர் பகுதியில் இருந்து கிளிநொச்சி நோக்கி பயணித்த கப்ரக வாகனமும் முந்திச்செல்ல முற்பட்ட வேலை மோதியதில் இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.

இதில், கிளிநொச்சி பொலிஸ் நிலையத்தில் கடமை புரியும் 32 வயதுடைய பொலிஸ் உத்தியோகத்தரும் மற்றும் விவேகானந்தர் நகர் பகுதியைச் சேர்ந்த 28 வயதுடைய ஒருவரும் காயமடைந்துள்ளனர்

காயமடைந்த ஒருவர் கிளிநொச்சி வைத்தியசாலையில் சிகிச்சை பெற்றுவருவதுடன், மற்றுமொருவர் மேலதிக சிகிச்சைக்காக யாழ் போதனா வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பாக பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.