வீதியோரத்தில் சடலமாக மீட்கப்பட்ட அதிபர்

-பதுளை நிருபர்-

பதுளை, அலுகொல்ல – கந்தேகெதர வீதியில் இன்று திங்கட்கிழமை காலை பாடசாலை அதிபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக கந்தேகெதர பொலிஸார் தெரிவித்தனர்.

ரண்யா தமிழ் வித்தியாலயத்தின் ஆரம்பப் பிரிவின் அதிபராக கடமையாற்றி வந்த ஹாலிஏல பகுதியைச் சேர்ந்த 59 வயதுடைய நபரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.

கந்தேகெதரவிலிருந்து பதுளைக்கு பயணித்து கொண்டிருந்த தனியார் பயணிகள் பேருந்து, தியனவல பகுதி வழியாக பயணிக்கும் போது, ​​மோட்டார் சைக்கிளுடன் வீதி ஓரத்தில் ஒருவர் வீழ்ந்து கிடப்பதை அவதானித்த சாரதி எதிர் திசையில் பயணித்த பேருந்தின் உதவியுடன் கந்தேகெதர வைத்தியசாலைக்கு கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்படுகின்றது.

இந்நிலையில் குறித்த நபர் ஏற்கனவே உயிரிழந்துள்ளதாக வைத்தியசாலை அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

குறித்த நபர் உயிரிழந்தமைக்கான காரணம் விபத்தாக இருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.

மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்

மின்னல்24 இணைய வானொலி
கேட்க கிளிக் செய்க