வீதியோரத்தில் இருந்து சிசுவின் சடலம் மீட்பு

-பதுளை நிருபர்-

மஹியங்கனை பொலன்னறுவை வீதியில் நேற்று புதன்கிழமை பிற்பகல் ஆண் குழந்தையின் சடலமொன்று கண்டெடுக்கப்பட்டுள்ளதாக கிராதுருகொட்ட பொலிஸார் தெரிவித்தனர்.

மஹியங்கனை பொலனறுவை வீதியில். அலுத்தயம பகுதியில் இராணுவ பேருந்து நிலையத்திற்கு அருகில் குழந்தையின் சடலம் என சந்தேகிக்கப்படும் சடலம் ஒன்று இருப்பதாக கிடைத்த  தகவலுக்கு அமைய அவ்விடத்திற்கு சென்ற பொலிஸ் உத்தியோகத்தர்கள் இந்த சடலத்தை மீட்டுள்ளனர்

அத்தோடு சடலத்திற்கு அருகில் ஒரு கறுப்பு துப்பட்டாவும் காணப்பட்டதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சடலம் மஹியங்கனை ஆதார வைத்தியசாலையின் பிரேத அறையில் சடலம் வைக்கப்பட்டுள்ள நிலையில்இ விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

பிறந்து ஒரு நாளே ஆன சிசுவின் சடலம் என சந்தேகிக்கப்படும் தாகவும்இ பிரேத பரிசோதனைக்கு பின்னர் தெரியவரும் எனவும் பொலிஸார் தெரிவித்தனர்.

பதுளை பிரிவுக்கு பொறுப்பான சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் வசந்த கந்தேவத்த மற்றும் மஹியங்கனை உதவி பொலிஸ் அத்தியட்சகர் எஸ்.பி.பலிபான ஆகியோரின் ஆலோசனையின் பேரில்  பொலிஸ் பரிசோதகர் சுதேஷ் சதுரங்க தலைமையில் குற்றத்தடுப்பு பிரிவின் அதிகாரிகள் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.