-மஸ்கெலியா நிருபர்-
ஹட்டன் நகரத்திலிருந்து இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி, வீதியை விட்டு விலகி, 100 அடி உயரமுள்ள தேயிலைத் தோட்டத்தில் பள்ளத்தில் விழுந்ததில், லொறியின் ஓட்டுநர் படுகாயமடைந்து, டிக்கோயா ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாக, ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
இந்த விபத்து கடந்த ஞாயிற்றுக்கிழமை இரவு 8:00 மணியளவில் ஹட்டன் கோவில் வீதியில் இடம்பெற்றுள்ளது.
அரியகம பகுதியில் நடந்த இறுதிச் சடங்கு ஒன்றுக்காக பொருட்களை ஏற்றிச் சென்ற பார ஊர்தி, மீண்டும் ஹட்டன் நகரத்திற்க்கு திரும்பிக் கொண்டிருந்தபோது, மழை காரணமாக சறுக்கி தேயிலைத் தோட்டத்தில் கவிழ்ந்தது.
விபத்து நடந்த நேரத்தில் ஓட்டுநர் மட்டுமே பார ஊர்தியில் இருந்ததாக ஹட்டன் பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரிகள் தெரிவித்தனர்.
ஹட்டன்-நுவரெலியா மற்றும் ஹட்டன்-கண்டி ஆகிய நகரங்களின் பிரதான சாலைகள் மற்றும் பக்கவாட்டு சாலைகளில் தொடர்ந்து மழை பெய்யும் போது வழுக்கும் தன்மை உள்ளதால்இ வாகனம் ஓட்டும்போது கவனமாக வாகனம் செலுத்துமாறு ஹட்டன் பொலிஸார் கேட்டுக்கொண்டுள்ளனர்.
தடம் புரண்டு பள்ளத்தில் விழுந்த பார ஊர்தி பலத்த சேதம் ஏற்பட்டுள்ளது.





