வீதியை விட்டு விலகிய கார்: மூவர்காயம்

-பதுளை நிருபர்–

பசறையில் இன்று வெள்ளிக்கிழமை காலை கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் மூவர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

பிபிலை வீதியில் 15 ஆம் கட்டை பகுதியில் கொழும்பில் இருந்து லுணுகலை நோக்கி சென்று கொண்டிருந்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி உட்பட இரண்டு பெண்கள் காயமடைந்துள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

காயமடைந்த மூவரும் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதன் பின்னர் மேலதிக சிகிச்சைகளுக்காக இரண்டு பெண்களும் பதுளை பொது வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டு அங்கு சிகிச்சை பெற்று வருவதாகவும் ஒருவர் பசறை வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருவதாகவும் பசறை வைத்தியசாலையின் அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.

காயமடைந்த இருவர் லுணுகலை பகுதியை சேர்ந்தவர் எனவும் ஒருவர் கடவத்தை பகுதியை சேர்ந்தவர் எனவும் தெரிவிக்கப்படுகின்றது.

விபத்துக்கான காரணம் இதுவரை கண்டறியப்படாத போதிலும் மேலதிக விசாரணைகளை பசறை போக்குவரத்து பொலிஸார் மேற்கொண்டு வருவதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்