
வீதியை விட்டு விலகிய கார்: பயணித்த அனைவரும் வைத்தியசாலையில்
திருகோணமலையில் இருந்து மட்டக்களப்பு நோக்கிப் பயணித்த கார் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளது.
குறித்த சம்பவம் மான்கேணி காட்டுப் பகுதியில் நேற்று ஞாயிற்று கிழமை மாலை இடம்பெற்றுள்ளது.
இந்த விபத்தில் சாரதி உட்பட காரில் பயணித்த அனைவரும் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டள்ளனர்.
சாரதி தூங்கியமையால் கார் வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளாகியுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்
