வீதியை புனரமைத்து தருமாறு மக்கள் கோரிக்கை

-கிண்ணியா நிருபர்-

திருகோணமலை தம்பலகாமம் பிரதேச செயலக பகுதியில் உள்ள தாயிப் நகர் கோயிலடி வைத்தியசாலை வீதி மோசமடைந்து காணப்படுவதாக மக்கள் தெரிவிக்கின்றனர்.

குறித்த வீதி அண்மையில் ஏற்பட்ட கன மழை காரணமாக உடைந்து மிக மோசமாக பாதிக்கப்பட்டுள்ளது. இதனால் இவ் வீதி ஊடாக போக்குவரத்து செய்வதில் மக்கள் கடும் சிரமங்களை எதிர்கொள்வதாக தெரிவிக்கின்றனர்.

4 கிலோ மீற்றர் தூரம் கொண்ட இவ் வீதி ஊடாக தினமும் பாடசாலை மாணவர்கள், கர்ப்பிணி தாய்மார்கள், அரச ஊழியர்கள் உட்பட பலரும் பயன்படுத்தி வருகின்றனர்.

வீதி அபிவிருத்தி அதிகார சபை மூலமாக மேற்கொள்ளப்பட்ட குறித்த வீதி தொடர்பில் தம்பலகாமம் பிரதேச ஒருங்கிணைப்புக் குழு கூட்டத்தில் முன்னாள் தம்பலகாமம் பிரதேச சபை தவிசாளர் எச் தாலிப் அலியாகேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த வீதி அபிவிருத்தி அதிகாரசபையின் பொறியியலாளர் ஒருவர், குறித்த வீதியில் சிறிய பாலம் ஒன்று அமைக்கப்படல் வேண்டும் என்றார்.

இதேவேளை குறித்த வீதியை புதிய அரசாங்கம் விரைவில் பூரணமாக திறம்பட செய்து தருமாறு பொது மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்